எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த நவகிரகத்தை வழிபட்டால் முன்னேறலாம் தெரியுமா ?

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் :

இவர்கள் விதி எண் 1-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 1-ஆக அமையப் பெற்றவர்கள், சிம்ம ராசி, லக்னக்காரர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோருக்கு சூரியதேவன் மூலம் பலன் உண்டாகும்.

2, 11, 20, 29  தேதிகளில் பிறந்தவர்கள் :

இவர்கள் விதி எண் 2-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 2-ஆக அமையப் பெற்றவர்கள், கடக ராசி, கடக லக்னக்காரர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

3, 12, 21, 30  தேதிகளில் பிறந்தவர்கள் :

இவர்கள் விதி எண் 3-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 3-ஆக அமையப் பெற்றவர்களுக்கு குருவருள் கைகூடும்.

மேலும் தனுசு, மீன ராசி, லக்னக்காரர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோரும் குரு பகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஆவார்கள். குருவானவர் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் பலம் மிகுந்தவர் ஆவார். சுபக் கிரகச் சேர்க்கை, பார்வை இருந்தால் அதிகம் நலம் புரிவார்.


4, 13, 22, 31  தேதிகளில் பிறந்தவர்கள் :

இவர்கள் விதி எண் 4-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 4-ஆக அமையப் பெற்றவர்கள், திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

5, 14, 23  தேதிகளில் பிறந்தவர்கள் :

இவர்கள் விதி எண் 5-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 5-ஆக அமையப் பெற்றவர்கள் புதன் பலம் பெற்றவர்கள்.

மேலும், மிதுன, கன்னி ராசி, லக்னக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். புதன் ஆட்சி, உச்சம், மூலத் திரி கோணம் பெற்றிருந்தாலோ, சுபக் கிரகச் சேர்க்கை, பார்வை பெற்று இருந்தாலோ பலம் பெற்றவர் ஆவார்.

6, 15, 24  தேதிகளில் பிறந்தவர்கள் :


விதி எண் 6-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 6-ஆக அமையப் பெற்றவர்கள், ரிஷப, துலா ராசி, லக்னக்காரர்கள், பரணி, பூரம், பூராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.  ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்ச, மூலத் திரிகோணத்தில் இருந்தால் பலம் பெற்றவர் ஆவார். சுபக் கிரகச் சேர்க்கை, சுபக் கிரகப் பார்வை பெற்று இருந்தாலும் நலம் புரிவார்.

7, 16, 25  தேதிகளில் பிறந்தவர்கள் :

இவர்கள் விதி எண் 7-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 7-ஆக அமையப் பெற்றவர் கள், அசுவினி, மகம், மூல  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

8, 17, 26  தேதிகளில் பிறந்தவர்கள் :

விதி எண் 8-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 8-ஆக அமையப் பெற்றவர்கள், மகர, கும்ப ராசி, லக்னக்காரர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். சனியானவர் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்றிருந்தால் நலம் புரிவார். சுபக் கிரகப் பார்வையுடன் இருப்பது சிறப்பாகும். சுபக் கிரகச் சேர்க்கையும் நலம் தரும்.

9, 18, 27  தேதிகளில் பிறந்தவர்கள் :

விதி எண் 9-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 9-ஆக அமையப் பெற்றவர்கள், மேஷ, விருச்சிக ராசி, லக்னக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.