வியாழக்கிழமைகளில் இதெல்லாம் செய்தால் உங்கள் வீட்டில் பண மழை கொட்டும்!

ஒருவரின் வீட்டில் அவர்கள் செய்யும் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் அடைந்து போதுமான செல்வங்களை ஈட்ட முடியவில்லை என்றாலோ அல்லது தோல்விகள் அதிகமாக நடந்தாலோ அவர்கள் வியாழக் கிழமை அன்று பூஜை செய்வது மிகவும் சிறந்த நாளாகும்.

ஏனெனில் நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். எனவே ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்கள்.

எனவே நவகிரகங்களில் இருக்கும் குருவிற்கு உகந்த நாள் வியாழன் கிழமையாகும். இதனால் வியாழன் கிழமை வரும் நாட்களில் குறிப்பிட்ட விஷயங்களை குருவிற்கு செய்து வந்தால், வீட்டில் செல்வம் வளம் அதிகரிக்கும்.

வியாழன் கிழமை குருவிற்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும்.
விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும்.
வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும்.

சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். இதனால் உங்களின் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும்.

வியாழக்கிழமை அன்று செய்யும் இந்த பூஜையில் வாழைப்பழத்தை தானம் வணங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

வியாழக் கிழமைகளில் விஷ்ணு கடவுளுக்கு பூஜை வழிபாடுகள் செய்யும் போது, மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு வைத்து படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வம் வளத்தை அதிகரிக்கச் செய்வார்.

வியாழக்கிழமைகளில் சிவபெருமான் மற்றும் குருவிற்கான பூஜைகளை செய்வதால், அன்று முழுவதும் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரித்து எப்போதும் நிலைத்து இருக்கும்.