வீட்டிற்குள் தெய்வ சக்தியை கொண்டு வர

வீட்டில் சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை ஏனென்றால் இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது என்பதால் தான்
நீங்கள் புதிதாக குடிபோகும் எந்த ஒரு வீட்டிற்கும் தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டுசெல்வது அவசியம் ஏனென்றால் மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது. எனவே உங்கள் வீட்டில் ஜீவசக்தி  கொண்ட சிட்டுக்குருவி,  புறா, குருவி போன்றவைகள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. அப்படி செய்தல் வீட்டிற்கு கெட்ட கசகுனம் ஏற்படும்
ஜீவசக்தி நிறைந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை  விரட்ட வேண்டாம். இவை உங்கள் வீட்டிற்கு வந்து போவதால் நமையே நடக்கும்.