பித்ருதோஷத்தால் பாதிப்படைபவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அவர்களை வணங்கக்கூடாது. அவர்களுக்கு படையல் போடக்கூடாது. உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.

துர்மரணமடைந்தது வாலிப வயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும். வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிப வயதுப் பையனைத் துன்புறுத்தும். கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது. (இதனால்தான் பெண்கள் அடிக்கடி மருதாணி அணிய வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள். தற்போது கடைகளில் விற்கும் மெகந்திக்கு பேய் பிசாசுகளை விரட்டும் சக்தி கிடையாது. சுத்தமான மருதாணி இலைக்கே இந்த சக்தி உள்ளது.)

ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது. ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது. பிரண்டைத் துவையல், தடியங்காய் (வெண்பூசணி லேகியம்), வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது. வீடுகளில் வெண் பூசணியை கட்டி தொங்கவிடுவதும் இதற்குத்தான். சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம், விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங் களில் புகைபோட ஆவிகள் ஓடி விடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

ஹாஸ்டல்கள், அரண்மனைகள், ஆஸ்பத்திரிகள், சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.
ஒருசில மாந்திரீகத் தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப் பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற் கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை. நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.