தவறியும் இந்த ராசி கற்றவர்கள் இந்த ராசியில் திருமணம் செய்யாதீர்கள்


இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்
பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி
மேற்கண்ட நட்சத்திரங்கள் இவைகள் மணமகள் மணமகன் நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யக்கூடாது. சிறிது கூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை ஒருவருக்கொருவர் இணைக்க கூடாது என்று காலபிரகாசிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது

இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்
ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி.
ஆகிய நட்சத்திரங்கள் மணமகன் அல்லது மணமகள் நட்சத்திரங்கள் ஒன்றாக வந்தால் திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். திசா சந்திப்பு தோஷம் உண்டாக முடியாது என்றும் குறிப்பிடப்படுகிறது.

சுமாரான இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுசம், பூராடம், உத்ராடம்

மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமம் பொருத்தம் தான் அதாவது சுமாரான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்ய பாதகம் இல்லை. பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும் போது நட்சத்திரத்தின் முந்தய பாதம் ஆணுக்கும் பிந்திய பாதம் பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.  உதாரணமாக மணப்பெண் மணமகன் ரோகினி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்வோம். ரோகினி நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும். பெண் நட்சத்திரப்பாதம் முந்தியும் ஆண் நட்சத்திரப்பாதம் பிந்தியும் இருந்தால் திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை.  உதாரணமாக மணப்பெண் மணமகன் திருவாதிரை நட்சத்திரம் என்று வைத்துக் கொள்வோம். திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.